புதுவித அசத்தல் சுவை.. கூட்டு வடக அப்பளக்குழம்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kuttu appla kuzhambu
kuttu appla kuzhambu

கூட்டு வடக அப்பளக்குழம்பு

தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சைப்பழ அளவு,
கூட்டு வடகம் – 10,
உளுந்து அப்பளம் – 2
மணத்தக்காளி, வற்றல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சாம்பார் பொடி – ஒன்றரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு, எ
ண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று.

செய்முறை:
கூட்டு வடகத்தைச் சிறிதளவு எண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். மணத்தக்காளி வற்றலையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் அப்பளத்தைக் கிள்ளிப் போட்டுப் பொரித்து எடுக்கவும். ஒரு வாணலியில் புளியைக் கரைத்துவிட்டு, அதனுடன் உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதை அடுப்பில் ஏற்றவும். இதனுடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து, வறுத்த கூட்டு வடகம், அப்பளம், மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு கறிவேப்பிலையைச் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: காராமணி, உளுந்து, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துச் செய்யப்படும் ஒருவகை வடகம்தான் கூட்டு வடகம்.

இது அப்பளம் விற்கும் கடைகளில் கிடைக்கும். பருப்பு சேர்க்காததால் இந்தக் குழம்பை இரண்டு நாள்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

எதிர்பாராமல் விருந்தினர்கள் வந்துவிட்டால் உடனே தயாரிக்கலாம். சுட்ட அப்பளம், தயிர்ப் பச்சடி இந்தக் குழம்புக்கு நல்ல காம்பினேஷன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.