பேட்சுலர்ஸ் சாதம் மட்டுமே வைச்சா போதும்.. இத கலந்து சாப்பிடலாம்!

Published:

many Dhall podi
many Dhall podi

பல்பருப்புப் பொடி

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு 100 கிராம்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2,
சீரகம், மல்லி (தனியா) – தலா ஒரு டீஸ்பூன்,
கறுப்பு உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, கொள்ளு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் துவரம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு, கொள்ளு, கறுப்பு உளுந்தையும் ஒன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். மல்லி, மிளகு, சீரகத்தை ஒன்றாகப் போட்டு வறுத்து எடுக்கவும். கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுக்கவும். கடைசியாக காய்ந்த மிளகாயைச் சூடுபடுத்தி எடுக்கவும். உப்பையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் பொடித்து நன்றாகக் கலந்துகொள்ளவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்.

குறிப்பு: சமையல் செய்ய நேரம் இல்லாதபோது சாதம் மட்டும் வைத்தால் போதும். இந்தப் பொடியை சாதத்தில் கலந்து சாப்பிட்டுவிடலாம். அதேபோல கறிவேப்பிலைக்குப் பதிலாக புதினாவை வறுத்து சேர்த்து அரைக்கலாம்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img