ஆரோக்கிய சமையல்: ஞாபகசக்தி, ஜீரண சக்தி தரும் துவையல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Digist thuvaiyal
Digist thuvaiyal

ஜீரணத் துவையல்

தேவையான பொருட்கள்: வல்லாரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, இளம்பிரண்டை – 3 துண்டு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறு துண்டு,
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல்,
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வல்லாரைக்கீரையை ஆய்ந்து எடுத்துக்கொள்ளவும். பிரண்டையைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி நறுக்கவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, வல்லாரை, பிரண்டை, இஞ்சி, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். இதனுடன், புளி உப்பு, தேங்காய்த் துருவல், வதக்கிய வல்லாரைக் கலவை ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்துடன் இந்தத் துவையலைச் சேர்த்து எண்ணெய் அல்லது நெய்விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வயிறு மந்தமாக இருந்தால், இந்தத் துவையலை அரைத்துச் சாப்பிட, நிவாரணம் கிடைக்கும். சுட்ட அப்பளம், பச்சடி இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.