ஹூண்டாய் மொபிஸ் அசத்தல் திட்டம்!

அடடே... அப்படியா? வணிகம்
hyundai
hyundai

எதிர்கால வாகனங்களுக்கான மடிக்கக் கூடிய ஸ்டீயரிங்கை உருவாக்கியுள்ளதாக ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் மிகப்பெரிய வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம், எதிர்கால வாகனங்களுக்காக மடிக்கக்கூடிய ஸ்டீயரிங் வீலை(foldable steering wheel) உருவாக்கியுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.

இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு மடிக்கக்கூடிய ஸ்டீயரிங் அமைப்பை உருவாக்கியுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் இணை நிறுவனமான மொபிஸ் தெரிவித்துள்ளது.

hundai2
hundai2

இதனைத் தொடர்ந்து, நிறுவனம் தற்போது புதிய அமைப்புக்கான காப்புரிமையைப் பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, இந்த அமைப்பு ஒரு ஸ்டீயரிங்கை கொண்டுள்ளது, இது டாஷ்போர்டுக்குள் மடிக்கப்பட்டு 25 சென்டிமீட்டர் வரை முன்னும் பின்னுமாக நகர்ந்து ஓட்டுநர் இருக்கைக்கு அதிக இடத்தை உருவாக்குகிறது.

மேலும், ஓட்டுனரின் இருக்கையை 180 டிகிரி சுழற்ற இந்த அமைப்பு அனுமதிக்கிறது.

குறிப்பாக, பயனர்களின் ஆயுள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அமைப்புடன் ஸ்டியர்-பை-வயர் (SBW) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக ஹூண்டாய் மொபிஸ் கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

hundai 1
hundai 1

ஸ்டியர்-பை-வயர்(SBW) என்பது ஸ்டீயரிங் செயல்பாடுகளுக்கு சக்கரங்களுக்கு மின் சமிக்ஞைகளை அனுப்பும் ஒரு அமைப்பாகும். இது ஸ்டீயரிங் மற்றும் சக்கரங்களுக்கு இடையேயான இயந்திர இணைப்பை நீக்குகிறது, இது மிகவும் வசதியான ஸ்டீயரிங்கை அனுமதிக்கிறது.

இத்தகைய புதிய அமைப்பு மூலம், தன்னியக்க கார்கள்(automotive cars) உட்பட எதிர்கால இயக்கம் துறைகளில் தனது இருப்பை மேம்படுத்தவும், உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேம்பட்ட ஆட்டோ தீர்வுகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மொபிஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.