December 2, 2025, 5:57 PM
23.9 C
Chennai

ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

rangamalai karur
rangamalai karur

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது.

கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை யில் உள்ள இந்த மலையின் தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை பாதுகாப்பிலும் உள்ளது.

சுமார் ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த ரங்கமலையை பசுமையான காடு சூழ்ந்துள்ளது. ரங்கமலை மீது அமைந்துள்ள மல்லீஸ்வரன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறுவது வழக்கம்.

மேலும், ஆண்டுதோறும் ஆடி 18-ந் தேதி ஆடி பெருக்கு விழாவின் போது சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரங்கமலைக்கு வந்து மல்லீஸ்வரரை தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு செல்வதற்கு முன்பு பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள விநாயகரை தரிசனம் செய்து விட்டு பின்னர் மலை ஏறி மல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்கின்றனர்.

கோவிலின் சிறப்புகள் : இக்கோவிலில் கழுத்தை பிடித்த நிலையில் மேற்கு நோக்கிய சுயம்பு லிங்கம் உள்ளது. மேலும் இந்த கோவிலில் கிண்ணாரக்கல், தோரக்கல், தங்கம்-வெள்ளி ஆறு, கருடன் வலம், கருநொச்சி குச்சி, விராலி மூலிகை, சஞ்சீவி மூலிகை, கைலாயக்குகை, நுழையாம்பாளி, காணாச்சுனை என பல்வேறு சிறப்புகள் உள்ளது.

இம்மலையில் மூலிகைகள் அதிகமாக உள்ளதால் சிலர் தேக நலன் கருதி மலையில் சில நாட்கள் தங்கி விட்டு செல்வதும் உண்டு. ரங்கமலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை மீது நடந்து சென்றால் கோவிலுக்கு சற்று கீழே பாதாளத்தில் பாறையில் நீர் ஊற்று உள்ளது.

இந்தக் கோவிலுக்கு வந்து சென்றால் திருமணம் கைகூடும் என்பதும், குழந்தைப்பாக்கியம் ஏற்படும் என்றும், நினைத்த காரியம் கைகூடும் என்றும் பெரியோர்கள் கூறுகின்றனர். அதனால் புதுமணத்தம்பதிகள் இந்த கோவிலுக்கு அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த மலையில் ஏறும்போது பச்சை பசேலென்ற அழகான இயற்கை அழகு பக்தர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று இங்கு வருபவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ள

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக

பஞ்சாங்கம் டிச.2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி

திருப்பரங்குன்றம் தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம்

Topics

சபரிமலையில் 15நாட்களில் 12.48 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்..

சபரிமலையில் மண்டல பூஜைக்கு நடைபெறந்த நாள் முதல் இன்று வரை 15நாட்களில்...

ஆர்எஸ்எஸ் ஸின் நோக்கம் அதிகாரம் அல்ல, சேவை!

அதிகாரத்தை அடையும் போராட்டம் அல்ல ஆர்எஸ்எஸ்ஸின் வரலாறு. மாறாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பிரிவினை அதன் நோக்கம் அல்ல. மாறாக நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பது.

கைசிக ஏகாதசி சிறப்பு: நம்பாடுவான், பிரம்மரட்சஸ், கைசிக புராணம்!

கைசிக ஏகாதசி! - கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும் "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".

Entertainment News

Popular Categories