
மதுரை விமான நிலையத்திலிருந்து புதிதாக புனே,டெல்லி, மும்பைக்கு கூடுதல் விமான சேவை ஏற்படுத்த திட்டம் தயார் – என்று, மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை தயார் நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் விமான நிலையத்தில் பணியாளர்கள் உள்ளனர்.
ஆகையால், விரைவில் வெளிநாட்டு சேவைகள் வர வாய்ப்புகள் அதிகம்__ முத்துக்குமார் மதுரை விமான நிலைய இயக்குனர்
மதுரை விமான நிலையத்தில் இன்று விமான பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அதில், விமான பயணிகளை திலகமிட்டு வரவேற்றனர். மேலும், பரதநாட்டியம், மரக்கன்று நடுவிழா, ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில்,
பயணிகள் சேவை தினம் (யாத்திரி சேவா திவஸ்) மதுரை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக மதுரை விமான நிலையத்தில் பயன்களை காண வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி முதல் குளிர்கால அட்டவணை துவங்குகிறது. அதில் புதிதாக சேவைகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புனேக்கு புதிதாக சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, இரவு நேரங்களில் நியூ டெல்லிக்கு விமான சேவைக்கான திட்டமும், நேவி மும்பைக்கும் கூடுதலாக விமான சேவை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச விமான சேவைக்கு தற்போது அழைப்பு இல்லை. ஆனாலும்,
மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவைக்கு தயார் நிலையில் உள்ளது இரவு நேர சேவையில் பணியாளர்கள் உள்ளனர். ஆகையால், விரைவில் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் வர வாய்புகள் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் குறித்த கேள்விக்கு?
பல்வேறு விமான நிறுவனங்களிடம் பேசி எல்லோரும் அவர்கள் அனுமதி கிடைத்தால் சேவையில் தொடர வாய்ப்புகள் அதிகம்.
கார்கோ (சரக்கு) சேவைகள் குறித்த கேள்விக்கு, தற்போது ஸ்ரீலங்கா அபுதாபி துபாய் ஒன்றை நகரங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து கார்கோ சேவைகள் செயல்பட்டு வருகிறது. மேலும், வெளிநாட்டு சேவைகள் வரும்போது கார்கோ சேவைகள் விரிவுபடுத்தப்படும் என மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறினார் .





