தண்ணீர் குடிக்கும் தண்டனை விதித்த பெற்றோர்! சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

அடடே... அப்படியா? உலகம் கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்
boy drinking water
boy drinking water
  • மூச்சு முட்ட நீர் குடித்து உயிரிழந்த சிறுவன்.
  • பெற்றோர் செய்த கொடுமை.

தண்ணீர் அருந்து என்று பெற்றோர் விதித்த தண்டனை கடைசியில் அந்த சிறுவனின் உயிர் பிரிவதற்கு காரணமானது. சிறு குழந்தைகளை கண்ணுக்கு இமைபோல் காக்க வேண்டிய பெற்றோரே அந்த சிறுவனுக்கு காலனாக, எமனாக மாறினார்கள்.

அத்தனை நீர் தன்னால் அருந்த இயலாது என்று சிறுவன் மன்றாடினாலும் சரி மூச்சு முட்ட, மூக்கைப் பிடிக்க தண்ணீர் குடிக்கும் தண்டனை விதித்து மகனின் இறப்புக்கு காரணமானவர்கள் அவர்கள்.

அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் நடந்துள்ள இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஜாகரி சபின் என்ற 11 வயது சிறுவன் சில நாட்களாக சிறுநீரக பிரச்சினையால் சிரமப்பட்டு வருகிறான். அவனுடைய சிறுநீர் மிகவும் திக்காக, முற்றிய வண்ணத்தில் மாறியதால் தந்தை ரைன், அனுடைய சித்தி தாரா அவனை தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்கள்.

தாரா ஒருநாள் சபீனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்காக சென்றாள். சபீனின் வாட்டர் பாட்டிலில் இன்னும் நீர் மீதி இருந்ததால் அவனை வினவினாள் தண்ணீர் ஏன் குடிக்கவில்லை என்று கேட்டாள். அதற்கு சபீன் ஆத்திரமடைந்தான். கோபப்பட்டான்.

அதனால் ரைன், தாரா அவனுக்கு தண்ணீர் குடிக்கும் பனிஷ்மென்ட் அளித்தார்கள். தாம் கூறும் வரை வெளியில் வரக்கூடாது என்று கூறினார்கள். அதனால் சபின் சமையலறையில் நின்று சுமார் 4 மணி நேரம் நீர் குடித்துக் கொண்டே இருந்தான்.

parents
parents

அதன் பலனாக அவனுக்கு வாந்தி ஏற்பட்டது. ஆனாலும் சரி அவர்கள் அவனை நிறுத்தவில்லை. சபீன் என்ன செய்கிறான் என்று அவர்கள் சமையல் அறைக்குச் சென்றார்கள். அங்கு கீழே விழுந்து கிடந்த சபீனைத் தூக்கி நிறுத்தினார்கள். ஆனால் சபீன் மீண்டும் விழுந்துவிட்டான். இதனால் தலையில் காயம் ஏற்பட்டது.

ரைன் கூறிய விவரங்களின் படி கீழே விழுந்து எழுந்த பின் சபீன் விந்தையாக ஏதேதோ பேசினான். அதனால் அவன் அதிக தண்ணீர் குடித்து சிரமப் பட்டான் என்று எண்ணி தூங்கும்படி சொன்னோம்.

அதன்பின் காலை படுக்கையின் மீது படுத்திருந்த சபீன் உடலெங்கும் ஜில்லென்று ஆகி உடம்பு விரைத்து இருந்தது. அதனால் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அதற்குள் அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

சபீன் உணவு அருந்தாமல் 4 மணி நேரம் சுமார் 83 லிட்டர் நீர் அருந்தி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கணக்கிட்டார்கள். உடலுக்கு எத்தனை தேவையோ அத்தனை நீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்றும் அதற்கு மீறிய நீர் குடித்தால் உயிருக்கு அபாயம் என்றும் தெரிவித்தார்கள்.

தாம் சபீனுக்கு விதித்த தண்டனை மூலமாகவே சிறுவன் இறந்துவிட்டான் என்று அறிந்த ரைன் தாரா தம்பதிகள் போலீசாரிடம் சரணடைந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.