காசுக்காக அரங்கனின் விசுவ ரூப தரிசனத்தை ரத்து செய்த அறங்கெட்ட துறை

புகார் பெட்டி
srirangam-paramapatha-vasal
srirangam-paramapatha-vasal

காசுக்காக அரங்கனின் விசுவ ரூப தரிசனத்தை ரத்து செய்த அறங்கெட்ட துறை

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அனைத்து நாட்களிலும் திருக்கோவில்கள் திறக்க தமிழக அரசு தற்போது தான் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

இன்று கடைசி புரட்டாசி மாத சனிக்கிழமை, 108 வைணவ ஸ்தல பெருமாள்களும் தினசரி ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு விசுவ ரூபம் ஆன பின்பே தங்களது ஸ்தலங்களுக்கு செல்வதாக வரலாறு
ஆனால் ஸ்ரீரங்கத்தில் கடைசி மாத புரட்டாசி சனிக்கிழமையான இன்று (ஏகாதசியும் கூட) எந்த விதமான முன்னறிவிப்புமின்றி விசுவ ரூபத்தையே ரத்து செய்துள்ளனர் அயோக்யர்கள்.

இவர்களின் சுய நலனுக்காக, இவர்கள்‌ வருமானம் பார்ப்பதற்காக, விசுவ ரூப தரிசனம் காண வந்த பக்தர்களை வயிற்றில் அடிப்பது போல திருப்பி அனுப்பியுள்ளனர்
இன்னும் இந்த அயோக்யர்களால் அரங்கன் என்ன பாடுபடப் போகிறாரோ?

உடனடியாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆனையரும் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆகம விரோத கார்யங்களை செய்ய எவரையும் அனுமதிக்காது கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்

இல்லாவிட்டால் பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்

அது மட்டுமல்லாது எப்படி இராமானுஜரை காக்க கூரத்தாழ்வான் எப்படி தன் கண்களை கொடுத்து காப்பாற்றினாரோ அதுபோல இராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட அரங்கனின் சம்பிரதாயங்களை காக்க உயிரை கொடுத்தும் காப்பாற்ற தயாராக இருக்கிறோம்

அரங்கன் திருவடிகளே சரணம்

தாயார் ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • B Saravana Karthik

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.