லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முட்டை கோஸ் சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Cabbage Rice
Cabbage Rice

முட்டை கோஸ் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி- 1 1/2 கப்
பாசிபருப்பு-1/2 கப்
முட்டைகோஸ் துருவியது – 2கப்
சாம்பார்த்தூள்-1டேபிஸ்பூன்
வெங்காயம் -1
தக்காளி-1
எலுமிச்சை-1(விரும்பினால மட்டும்)
உப்பு தேவைக்கு
கொத்தமல்லிதழை -சிறிது
தாளிக்க:
கட்கு,சீரகம்,கறிவேப்பிலை
எண்ணை தாளிக்க

செய்முறை
வாணலியில் எண்ணை ஊற்றீ கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவும்
பின் வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும் அதனுடன் தக்காளித்துண்டுகள் போட்டு வதக்கவும். பின் முட்டைகோஸ் போட்டு வதக்கவும்

அதில் சாம்பார்த்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் ரைஸ்குக்கரில் 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

அதில் பாசிபருப்பையும்,அரிசியையும் போட்டு கொதிக்கவிடவும்
பின் வதக்கிய முட்டைக்கோஸை சேர்த்து கலக்கி வேகவிடவும். வெந்து எடுத்ததும் கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்
ப்ரஷர் குக்கரில் என்றால் இரண்டு விசில் விட்டு நிறுத்தவும். கூடுதல் காரம் விரும்பினால் பச்சை மிளகாய் நறுக்கி வதக்கும்போது சேர்க்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.