Homeசமையல் புதிதுலஞ்ச் பாக்ஸ் கார்னர்: டர்கிஷ் புலாவ்!

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: டர்கிஷ் புலாவ்!

Turkish Pulao
Turkish Pulao

டர்கிஷ் புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 3 சிறியது
தக்காளி – 3 மீடியம் சைஸ்
முந்திரி – அரை கப்
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
வெல்லம் – 5 தேக்கரண்டி
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி தழை

செய்முறை
பொடியாக நறுக்கிய தக்காளியுடன் தூள் வகை, வெல்லம் எல்லாம் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

இந்த கலவை அரை மணி நேரம் ஊறட்டும். அரிசியை கழுவி ஊற வைக்கவும். வெங்காயம் நறுக்கி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் முந்திரி சேர்த்து வதக்கவும்.

பின் ஊற வைத்த தக்காளி கலவையை சேர்த்து பிரட்டவும். மூடி போட்டு சிறுந்தீயில் குழைய வேக விடவும்.

அரிசியை நீரின்றி வடித்து விட்டு இந்த கலவையுடன் சேர்த்து பிரட்டி விடவும். பின் தேவையான உப்பு மற்றும் 3 1/2 – 4 கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் சிறுந்தீயில் மூடி வேக விடவும்.

கடைசியாக கொத்தமல்லி தூவி எடுக்கவும். சுவையான டர்கிஷ் புலாவ் தயார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,122FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,191FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...