டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்: கபில்தேவ் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு ஒரு வாய்ப்பு!

ind vs nz
ind vs nz
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது..

இன்று கடைசி பகுதி ஆட்டத்தின் போது அஷ்வின், நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு ஒரு பந்து வீசினார். அதனை அவர் தடுத்தாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் படாமல் காலில் பட்டது. அஷ்வின் LBW கேட்டார். அம்பயர் தரவில்லை. இந்திய அணி ரெவியூ கேட்டது. பந்து லெக் ஸ்டெம்பிற்கு இரண்டு செமீ தள்ளிப் போனதாக காமிரா சொன்னது. அஜாஸ் படேல் அவுட் இல்லை என்று தீர்மானமானது.

இந்திய அணியின் வெற்றி கூட இத்தனை சிறிய அளவில் எட்டாமல் போனது. நியூசிலாந்து வீரர்கள் தொடக்கத்தில் நன்றாக ஆடினார்கள். 36ஆவது ஓவரில் வில்லியம் சமர்வில்லி அஷ்வின் பந்தில் LBW முறையில் அவுட்டானார்.

ரிவியூ கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் முடிந்து சமர்வில்லி ரிவியூ கேட்டபோது நேரம் ஆகிவிட்டது. ஆனால் அவர் அவுட் ஆகியிருக்கவில்லை. இருந்தாலும் தாமதமாக ரிவியூ கேட்டதால் அவர் வெளியேற வேண்டியதாயிற்று.

டாம் லாதம் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் வெகு நேரம் தடுத்தாடிக் கொண்டிருந்தார்கள். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் மனதளவில் சோர்வடைந்திருந்த நேரத்தில் 55ஆவது ஓவரில் டாம் லாதம் அவுட்டானார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

கேன் வில்லியம்சனை உமேஷ் யாதவ் அவுட்டாக்கினார். அதன் பின்னர் ஸ்பின்னர்கள் விக்கட் எடுக்கத் தொடங்கினர். இறுதி ஜோடி ரசின் ரவீந்திரா, அஜாஸ் படேல் இருவரும் 52 பந்துகள் ஆடினர். எடுத்தது என்னவோ பத்து ரன் மட்டுமே. ஆனால் தோல்வியைத் தவிர்த்தனர்.

aswin3
aswin3

கடந்த நான்கு நாட்களாக ஒளி குன்றியதால் மேட்சின் கடைசி சில ஓவர்கள் ஆடப்படவில்லை. இன்றும் ஒளி போதாமையால் ஆட்டத்தை நிறுத்துவதாக அம்பயர்கள் அறிவித்தனர். எனவே ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக ஏற்கனவே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த அஷ்வின் அண்மையில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை டி20 தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி தற்போது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றும் ஒரு சாதனையை அவர் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார். அஷ்வின் இந்த டெஸ்டில் இதுவரை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 418 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இந்திய வீரர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியல் இதோ –
1) அணில் கும்ப்ளே 132 போட்டிகள் – 619 விக்கெட்டுகள்
2) கபில் தேவ் 131 போட்டிகள் – 434 விக்கெட்டுகள்,
3) அஷ்வின் 81* போட்டிகள் – 418 விக்கெட்டுகள்
4) ஹர்பஜன் சிங் 103 போட்டிகள் – 417 விக்கெட்டுகள்
5) இஷாந்த் சர்மா 105 போட்டிகள் – 311 விக்கெட்டுகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories