
அவரைக்காயிலே மருத்துவம்
புரோட்டீன், கார்போஹைடிரேட், பாஸ்ஃபரஸ், பொட்டாசியம். வைட்டமின் ஏ, பி, டி. யாவும் அவரைக்காயில் அடங்கியுள்ளன. தலைவலி. அஜீரணம், நீரிழிவு, பித்தம் வயிற்றுவலி யாவற்றையும் போக்கும் குணம் இதற்கு உண்டு. முற்றிய அவரை விதைகளை அரைத்து பாலாக குழந்தைகளுக்குப் புகட்டினால் புஷ்டி உண்டாகும்.
வெள்ளரிப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சையோ காயையோ அடிக்கடி சாப்பிட புகை பிடிப்பதால் ஏற்படும் விஷத்தைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
சப்போட்டாய் பழத்தின் மகத்துவம்
புற்று நோயை அழிக்க வல்லது. சப்போட்டாவை அன்றாடம் சாப்பிட்டு வர புற்றுநோய் அணுகாது.
பசலைக் கீரை
அதிக அளவு ஃபாஸ்ஃபரஸ், கால்சியம், குளோரின் உட்பட ஏ, பி, சி ஆகிய வைட்டமின்கள் அடங்கிய கீரை பசலைக்கீரை தான். இதைத் தொடர்ந்து சாப்பிட நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
மருத்துவம் மாற்றும் பொழுது…
ஆங்கில மருத்துவத்தில் பிணி சரியாக வில்லையென்றால் உடனே சித்த வைத்தியத்துக்கோ அல்லது ஆயுர்வேத வைத்தியத்துக்கோ மாறுவார்கள். அப்படி ஆயுர்வேத வைத்தியத்துக்கு மாறும் பொழுது முதலில் அருகம்புல் கஷாயம் வைத்து சாப்பிட்டு விட்டு மறுநாள் மருந்து சாப்பிட பூரண பலன் கிடைக்கும்.