சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச.19 வரை தடை!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா சென்னை லைஃப் ஸ்டைல்
thiruvannamalai2
thiruvannamalai2

திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிசம்பர் 19ம் தேதி வரை தடை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல டிசம்பர் 19ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 4 ம் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்கிற நிலையை அடைய உதவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

  • எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.