பிறந்தநாள்.. மெழுகுவர்த்தி தீ பெண்ணின் தலையில் பற்றியதால் பரபரப்பு!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
birthday - 2026

அமெரிக்காவை சேர்ந்த அனா ஒஸ்டெர்ஹவுஸ்(34) என்ற பெண், தனது 7 வயது மகன் ஹண்டருடன் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாட முடிவு செய்து அதன்படி அதற்கேற்றவாறு அனைவரையும் அழைத்திருந்தார்.

அதனையடுத்து அலங்காரம் செய்யப்பட்ட அந்த அறையில் அனைவரது முன்னிலையிலும் பிறந்தநாள் கேக்கில் நிறைய மெழுகுவர்த்தியை ஏற்றினார். அங்கு குழுமியிருந்த அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாட தொடங்கியதும் உற்சாகத்தில் அனாவும் பாடலை பாடிக்கொண்டே கேக்கில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்க முற்பட்டார்.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக, எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி அவரது தலைமுடியில் பட்டு மளமளவென்று தீ எரிய ஆரமித்தது, அதனையடுத்து அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு அனாவை பெரிய விபத்தில் சிக்காதவாறு காப்பாற்றினர்.

இருப்பினும் அவருக்கு கண் இமை முடியும், தலைமுடியும் பொசுங்கியது, மேலும் முகத்தில் சிறிதளவில் தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அனா கூறுகையில், ” அந்த நொடி என் வாழ்க்கை முடிய போவது என் கண் முன்னால் தெரிந்தது. இது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம், அந்த நேரம் என்ன நடந்தது என்றே என்னால் யூகிக்க முடியவில்லை. அதே சமயம் மற்றவர்களுக்கு என்னால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் வேண்டினேன்.

மேலும் துரிதமாக செயல்பட்டு என்னை காப்பற்றிய என் குடும்பத்திற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்” என்று கூறினார். இவர் முடியில் நெருப்பு பற்றிய புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

https://youtu.be/8ozF28b831c

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.