சூரிய கிரகணம்: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

Published:

moon 1 - 2026

விண்வெளியில் இருந்து காட்சிப்படுத்தப்பட்ட சூரிய கிரகணத்தின் படங்களை நாசா பகிர்ந்திருக்கிறது.

அண்டார்டிகாவை கடந்து சென்ற போது கிரகணத்தின் நிழலை விண்வெளி காலநிலை கண்காணிப்பு விண்கலம் கைப்பற்றியதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் கடந்த வாரம் நிகழ்ந்தது. இந்த கிரகணத்தை இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து பார்க்க முடியவில்லை என கூறப்பட்டது.

இந்த கிரகணமானது அண்டார்டிகாவில் இருந்து காண முடியும் எனவும் அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சில நாடுகளில் உள்ள மக்கள் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது எனவும் கூறப்பட்டது.

நாசா இன்ஸ்டாகிராமில் விண்வெளி ஆய்வகத்தில் இருந்து பிடிக்கப்பட்ட படங்களை பகிர்ந்திருக்கிறது. இது அண்டார்டிகாவை கடந்து செல்லும் சந்திரனின் நிழலை அழகாக காட்டுகிறது.

பதிவிட்ட பதிவோடு நாசா இதற்கு ஒரு தலைப்பையும் பதிவு செய்துள்ளது. அதில், நீங்கள் எப்போதாவது சூரிய கிரகணத்தை பார்த்து இருக்கிறீர்களா? அதுவும் விண்வெளியில் இருந்து முழு சூரிய கிரகணத்தை பார்ப்பது எப்படி இருக்கும் என தெரியுமா?

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இதை டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி (டிஎஸ்சிஓவிஆர்) விண்கலம் அண்டார்டிகாவை கடந்து சென்ற போது நிழலை கைப்பற்றியது என விண்வெளி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விண்வெளியில் கூம்பு வடிவம் விரிந்து கிடக்கும் போது சூரிய கிரகணத்தின் நிழல் மிகவும் எளிதாகக் காணக்கூடிய வகையில் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவில் மூன்று படங்களை பகிர்ந்திருக்கிறது, இந்த பதிவில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்கள் கிரகணத்தின் மற்றொரு கண்ணோட்டத்தில் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.

அதாவது சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) விண்வெளி வீராங்கனை கைலா பரோன் ஐஎஸ்எஸ்-ல் இருந்து கிரகணத்தின் படங்களை பதிவு செய்தார். அதேபோல் சூரிய கிரகணம் எப்படி நிகழ்கிறது என்பதை இந்த பதிவில் நாசா விளக்கி இருக்கிறது.

அதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நகர்ந்து செல்லும் போது அதன் நிழல் பூமி மீது விழுகிறது. அதில் சில பகுதிகளில் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் அப்போது நிலவின் நிழல் கிரகணமாக ஏற்படுகிறது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

அதேபோல் முழு சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி என மூன்றும் நேர் கோட்டில் வரிசையாக இருக்கும்.

அதேபோல் சூப்பர் மூன் புகைப்படம் சமீபத்தில் விண்வெளி நிலையத்தின் மூலம் எடுக்கப்பட்டது. சந்திரன் எந்த நிலையில் இருந்தாலும் விண்வெளியில் அது அற்புதமான பார்வை என சர்வதேச விண்வெளி நிலையம் தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியன் சுற்றுப்பாதையில் இருந்து சூப்பர் பிங்க் மூன் ஆச்சரியமூட்டும் புகைப்படங்களை பகிர்ந்தனர்.

விண்வெளி வீரர்கள் பகிர்ந்த சூப்பர் மூன் புகைப்படம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. சந்திரன் எந்த விதத்தில் எந்த கட்டத்தில் இருந்தாலும் அது விண்வெளியில் இருந்து அற்புதமான பார்வையை வழங்குகிறது என்று ஐஎஸ்எஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தது.

நிலையம் பகிர்ந்து கொண்ட புகைப்படமானது பூமியை அடிப்படையாகக் கொண்டு சூரியனுக்கு எதிரே நிலவு தோன்றும் போது எடுக்கப்பட்டது. இந்தாண்டு முழு நிலவுகளில் பெரிய நிலவு ஏப்ரல் 7 ஆம் தேதி உயர்ந்தது என நாசா தெரிவித்தது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பிங்க் மூன் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. இந்த புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது.

இதற்கு நெட்டிசன்கள் ஆச்சரியமூட்டும் புகைப்படம், அழகு, வியக்கத்தக்க புகைப்படம் என பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CXKQ86Dps0H/?utm_source=ig_web_copy_link

Related articles

Recent articles

spot_img