Drumstick spinach rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முருங்கை கீரை சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Drumstick spinach rice - 2026

முருங்கை கீரை சாதம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
முருங்கை கீரை – 1/2 கப்,
பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்

வறுத்து பொடியாக்க

உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
பச்சரிசி – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கொப்பரை தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
பூண்டு – 3
காய்ந்த மிளகாய் – 1
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவி கொள்ளவும்.பிறகு அவற்றுடன் உப்பு, 3 3/4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து மூடிக்கொள்ளவும். பின்னர் 2 விசில் வந்ததும் தனலைக் குறைத்து 5 நிமிடம் கழித்து கீழே இறக்கவும்.

இப்போது மேலே வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் ஒரு மிக்சியில் போட்டு நன்கு பொடியாக மாற்றி வைத்துக்கொள்ளவும்.

இதன் பிறகு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து முருங்கைக்கீரையை நன்றாக சுத்தமாக அலசிக்கொள்ளவும். பின்னர், பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.

இப்போது, ஒரு காடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தலித்துகொள்ளவும். பின்னர், நசுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம், சிறிது உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து, அவை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்துவிடவும். கீரை நன்றாக வெந்ததும், அவற்றை சாதத்தோடு சேர்க்கவும்.

இறுதியாக முன்னர் நாம் வறுத்து பொடியாக மாற்றியுள்ள பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான மற்றும் சுவையான முருங்கைக்கீரை சாதம் ரெடியாக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.