நெல்லை: இயற்கையோடு இயைந்த ஓர் இடம்! சுற்றுலா தலம்!

Published:

kunthan kulam 3 - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குநேரி வட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் அமைந்துள்ளது.

kunthan kulam - 2026

1994-ம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியான இதன் பரப்பு 129.33 ச. கிமீ ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 33 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 43 இனத்தை சேர்ந்த 10,௦௦௦க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.

kunthan kulam 6 - 2026

கூந்தன் குளம் கிராம மக்களின் அரவணைப்பில், பறவைகள் யாவும், மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளின் மரங்களிலும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு, குஞ்சுகளை பாதுகாத்துக் கொள்கின்றன.

kunthan kulam 1 - 2026

பூநாரைகள்
நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசா வண்ணத்தையும் ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் உள்ள ரன்-கட்ச் பகுதியில் லட்சக்கணக்கில் இனப் பெருக்கம் செய்யும் பூநாரைகளை கண்ட பறவையியல் அறிஞர் சலீம் அலி அவ்விடத்தை ஆசியாவின் மிகப் பெரிய பூநாரைகள் பகுதியாக அறிவித்தார்.

kunthan kulam 7 - 2026

தமிழகத்தின் பருவநிலையை விரும்பி ஆண்டுதோறும் திசம்பர், சனவரி மாதங்களில் பூநாரைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. தமிழகத்தில் கூந்தன் குளம் தவிர, பழவேற்காடு, கோடியக்கரை பறவைகள் சரணாலயங்களுக்கும் வருகை தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
kunthan kulam 5 - 2026

பிற பறவைகள்
சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என 43 நீர்ப் பறவைகள் கூந்தன் குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிவது கணக்கிடப்பட்டுள்ளது.

kunthan kulam 4 - 2026

ஓராண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகாமை நகரமாக நாசரேத்து 15 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அக்டோபர் இறுதியில் கூந்தன் குளம் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல், மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்கின்றன. பறவைகளைக் காண சனவரி, பிப்ரவரி ஏற்ற மாதங்களாகும்.

Related articles

Recent articles

spot_img