samayapuram mariamman - 2026

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.42 கோடி உண்டியல் காணிக்கை!

சற்றுமுன் ஆலயங்கள் தமிழகம்
samayapuram mariamman - 2026

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.42 கோடி ரொக்கம், 3.8 கிலோ தங்கம், 5.3 கிலோ வெள்ளி, பக்தர்கள் செலுத்திய காணிக்கை கிடைக்கப்பெற்றன.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் பிரசித்திப் பெற்ற தலமாகும்.
இந்தத் தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்திவருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

undiyal count - 2026

அமோக உண்டியல் காணிக்கை
அப்போது கடந்த 34 நாள்களில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை ஒரு கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 834 ரொக்கமும், மூன்று கிலோ 802 கிராம் தங்கமும், 5 கிலோ 317 கிராம் வெள்ளியும், 99 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.