
இந்தியாவில் பல வகையான பணப்பரிமாற்றம் சார்ந்த பல ஆப்கள் வந்துவிட்ட போதும் கூட பேடிஎம் ஆப் ஆனது எந்த விதமான சரிவையும் காணவில்லை.
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட – பல்வேறு வகையான யூசர்களுக்கு ஏற்றவாறு பேடிஎம் தனது சேவைகளை மேம்படுத்திக் கொண்டே போவது ஒரு முக்கிய காரணம் ஆகும்.
அப்படியாக சமீபத்தில், இந்த பேமண்ட் பிளாட்ஃபார்ம் ஆனது ‘டேப் டு பே’ என்கிற அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது,
இந்த அம்சம், யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை பிஓஎஸ் மெஷினில் (PoS Machine) மேல் வெறுமனே டேப் செய்வதன் மூலம் மிகவும் விரைவான பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது. அறியாதோர்களுக்கு, ஸ்வைப்பிங் மெஷினை தான் இங்கே பிஓஎஸ் மெஷின் என்று குறிப்பிடுகிறோம்.
இந்த அம்சமானது என்எஃப்சி (NFC) வழியிலாக பணம் செலுத்த உதவும், அதாவது இதன் கீழ் பணம் செலுத்த உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படாது. இருப்பினும், இந்த (அம்சம்) சேவை, தற்போது வரை ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஐபோன் யூசர்களுக்கான என்எஃப்சி-சப்போர்ட் ‘டேப் டு பே’ அம்சமானது ஆப்பிள் பே (Apple Pay) வழியாக மட்டுமே அணுக முடியும் என்பதால், ஐஓஎஸ் யூசர்கள் இந்த பேடிஎம் அம்சம் / சேவையை அணுக முடியாது, நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் பே அம்சம் தற்போது வரை இந்தியாவில் அணுக கிடைக்கவில்லை.
ஆக நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு யூசராக இருந்தால், உங்கள் மொபைலில் பேடிஎம் ஆப் இருந்தால், நீங்கள் வெறுமனே ஒரு ‘டேப்’ செய்வதன் வழியாக பணம் செலுத்தக்கூடிய அம்சத்தை இயக்க ஆர்வமாக இருந்தால், கீழ்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பைத் திறக்கவும். பேடிஎம் ஆப் ஆனது சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இல்லையெனில், கூகுள் பிளே ஸ்டோர் சென்று அப்டேட் செய்யவும்.
- அப்டேட் ஆன பின்னர் பேடிஎம் ஆப்பை திறக்கவும், பின் ‘டேப் டு பே’ (Tap to Pay) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்களின் பேங்க் கார்டு ஏற்கனவே பேடிஎம் ஆப்பில் சேமிக்கப்படவில்லை என்றால், ஸ்க்ரீனின் அடிப்பகுதியில் உள்ள ஆட் நியூ கார்ட் (Add New Card) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இதை ஏற்கனவே செய்து இருந்தால், இந்த படிநிலையை அப்படியே தவிர்க்கவும்.
- இப்போது குறிப்பிட்ட அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுத்து, அந்த கார்டின் விவரங்களை சரிபார்க்க ப்ரொசீட் (Proceed) என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) ஒன்றை பெறுவீர்கள். அதை உள்ளிடவும், இப்போது உங்களுக்கான ‘டேப் டு பே’ ம் அம்சம் செயல்படுத்தப்படும்.
- இந்த ‘டேப் டு பே’ அம்சத்தைப் பயன்படுத்தும் போது, உங்கள் ஸ்மார்ட்போனில் என்எஃப்சி ‘ஆன்’ செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தி செலுத்தக்கூடிய தொகையின் அதிகபட்ச வரம்பு ரூ.5,000 ஆகும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
ஒருவேளை நீங்கள் செய்யும் பரிவர்த்தனை தொகை ரூ.5000 க்கு மேல் இருந்தால், நீங்கள் பிஓஎஸ் இயந்திரத்தில் கார்ட்டின் பின்னை உள்ளிட வேண்டி இருக்கும்.
இந்த அம்சத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது, உங்கள் கார்டின் 16 இலக்க பான் (PAN) நம்பரை டிஜிட்டல் பரிவர்த்தனை குறியீடாக மாற்றும். இந்த குறியீடு, கார்டின் எந்த விவரங்களையும் பகிராமல், பிஓஎஸ் இயந்திரத்தில் தொகையைச் செலுத்த அனுமதிக்கிறது