petrol bomb in bjp office - 2026

பாஜக., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! சதித்திட்டம் எதைக் குறிவைத்து..?!

சற்றுமுன் Featured அடடே... அப்படியா? அரசியல்
petrol bomb in bjp office - 2026

-> டி.எஸ். வேங்கடேசன்

சென்னை கமலாலயத்தில் பாஜவின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு விஷமிகள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பினர்.
நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த இருவர் பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை பிடிக்க முயற்சிக்கு முன் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து பாஜகவின் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களது அலுவலகத்தின் மீது 1.30 மணி அளவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுபோன்று சம்பவம் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பாஜகவினர் பயப்பட வேண்டாம்” என கூறியுள்ளார்.

புகார் மற்றும் கண்காணிப்பு கேமார பதிவுகளின் அடிப்படையில் ,சென்னை நந்தனத்தைச் சேர்ந்த 38 வயது கடுக்கா வினோத் குமாரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். குற்றப்பட்டியலில் உள்ள இவர் பணத்துக்காக பெட்ரோல் குண்டுகளை எரிவார் என்றும் ஏற்கெனவே தேனம்பேட்டை காவல் நிலையம், டாஸ்மாக் கடைமீது இதே போன்று குண்டுகளை வீசிய வழக்குகள் உள்ளதாகவும் இவர் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

எப்போது எல்லாம் பாஜக, ஆர், எஸ் எஸ், இந்து அமைப்புகள், ஹிந்துகள் மற்றும் கோயில் சிலைகள் உடபைப்பு சம்பவங்களின் போது போலீசாரின் நிலையான காரணம் , “ இதுகுடிகாரனின் வேலை. அவர் மன நிலை சரியில்லாதவர் என கூறி யாரைவது ஒருவரை கைது செய்து வழக்கை மூடிவிடுவார்கள். இந்த வழக்கிலும் அப்போது குடித்திருந்தார். மத மற்றும் அரசியல் காரணம் இல்லை.

நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு பிடிக்கவில்லை. அதனால் வீசியதாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர். பணத்துக்காக குண்டு வீசும் அந்த நபர், உள்நோக்கம் இன்றி சரியாக பாஜக அலுவலகம் மீது குடிபோதையில் குண்டுகளை வீசி தப்பிக்க முடியும் . இந்த கேள்விக்கு போலீசார் பதில் அளிப்பார்களா?

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, அண்ணாமலையின் அதிரடி ஆட்டம்., ஆர் எஸ் பார்தி கூறிய பத்திரிகையாளர்களை சமாளிக்கும் பாங்கு, நீட் டுக்கு பெருகி வரும் மக்களின் அமோக ஆதரவு, தனித்துப் போட்டி போன்ற காரணங்களால் திமுகவுக்கு கிலிப் பிடித்துள்ளது என்றகிறார் பாஜக அனுதாபி முரளி.

கடந்த 2007ல், அயோத்திராமர் குறித்த கருணாநிதியின் கருத்துக்கு அவரது தலையையும் நாக்கையும் வெட்டி கொண்டு வருபவருக்கு உரிய பரிசு தருவேன் என விஹெச் பி தலைவர் கூறியதை கண்டித்து திமுவினர் கமலாலயத்தின் மீது கற்களை எரிந்தனர். விஹெச்பி, ஹிந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் காரைக்குடியில் ஹெச் ராஜா வீட்டின் மீது திமுக குண்டர்கள் கல்லெறிந்தனர். அப்போதைய அமைச்சர் ஆற்காடு வீராசாமி “பாஜகவின் தெருவில் நடமாட முடியாது” என மிரட்டல் விடுத்தார்.

திமுக ஆட்சிக் காலங்களில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நில அபகரிப்பு, எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு, குண்டா சட்டத்தில் அடைப்பது, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக இருக்கும் என்பது கடந்த கால வரலாறு சொல்லும் பாடம். எனவே இந்த தாக்குதலிலும் திமுகவின் கை இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தலைவர் அண்ணாமலை கூறியது போன்று “அரசின் ஏவலாளியான போலீசார் வழக்கை சரியாக விசாரிக்க மாட்டார்கள் என்பது உறுதி.

சில தினங்களுக்கு முன் “ரெட்பிக்ஸ்” என்ற கிறிஸ்துவ ஆதரவு பெற்ற யூ டியூப் சேனலில் காவல்துறையில் இருந்து ஒழுங்கீனத்துக்காக சஸ்பெண்ட் / பணி நீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாளர் என தன்னைத்தானே கூறி கொண்டு வரும் சவுக்கு சங்கர் ஆளுநருக்கு எதிராக மிக தரக்குறைவான, மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

அதில் , “ எங்களுக்கு பாடம் எடுக்க ஆளுனர் யார். போஸ்ட்மேன் வேலைதான் செய்ய வேண்டும். முரசொலி கட்டுரையை செல்வம் தான் சிலந்தி என்ற பெயரில எழுதி வருகிறார். இது ஆளுநருக்கு எதிரான மோதலை திமுக கையில் எடுத்துள்ளதை காட்டுகிறது.

திருக்குறள், கம்பராமாயனம் பற்றி கூற அவருக்கு தகுதியில்லை. அவர் ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை அமல்படுத்தப்பார்க்கிறார். பாஜக இல்லாத மாநிலங்களில்தான் இத்தகைய பிரச்னைகள். ஆளுநர் மாளிகை முன்பாக தினம் ஆர்ப்பாட்டம், உதகமண்டலம் செல்லும் வழியில் மலைச் சாலையில் வாகனங்களை நிறுத்தி முற்றுகை, செல்லுமிடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் திமுக செய்தால் ஆளுனர் ஓடிவிடுவார்.

அதேபோன்று வைத்திராம தெருவின் இரு பக்கமும் ஆளும் திமுகவினர் கூடி தினம் தினம் போராடினால் பாஜகவினர் யாரும் வெளியே வரமுடியாது. ஆளும் கட்சியின் போலீசார் ஒப்புக்கு லத்தியால் தடவி கொடுத்து அவர்களை பாதுகாப்பார்கள். இதை பாஜகவும், ஆளுநரும் உணரவேண்டும் என பகிரங்கமாக கூறி திகமுவினர் தூண்டி விட்டுள்ளார்.

“பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ஹிந்து அமைப்புகள், பிராமணர்கள் மீது வெறுப்பையும், விஷத்தையும் கக்கி வரும் சங்கர் இப்போது ஆளுநருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த யூ டியூப் சேனல் , ஃபெலிக்ஸ் ஜெரால்டு, நிருபர் கரிகாலன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சங்கர் மீது ஆளுநருக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதற்க கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . தேச துரோக வழக்குக் கூட பதிய வேண்டும்” பொது மக்கள் , சட்ட நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.