ஆமாம்பா ஆமாம்; இளையராஜா ஐயர்தான்! பாரதிராஜா Vs ஹெச்.ராஜா

சற்றுமுன் சென்னை

சென்னை: ஞாயிற்றுக்கிழமை நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, சமீப காலமாக இளையராஜா ஐயர் போல் நடந்து கொள்கிறார் என பேசினார்.

அவரது இந்தப் பேச்சு சமூக இணையதள மட்டத்தில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. இளையராஜாவின் ரசிகர்கள் பாரதிராஜாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றினர்.

இந்நிலையில் இதற்கு பாஜக, தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர் ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாக கூறுவது புரிதல் இன்மையே என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.