இன்ஸ்டா மூலம்.. சிறுமிக்கு பாலியல் கொடுமை.. வீடியோவை வெளியிட்டு பணம் பறிப்பு!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் மதுரை
santhosh
santhosh

காதல் வலையில் சிக்கிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள், வீடியோவை காட்டி 50 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலமடை பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான சந்தோஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவியின் புகைப்படங்களுக்கு லைக் செய்வது, கமெண்ட் செய்வது என இருந்து வந்த சந்தோஷ்குமார், பின்னாளில் அவரை காதல் வலையில் வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியின் ஆசையை தூண்டி நேரில் வரவழைத்த சந்தோஷ், தனது இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்து சென்று இருக்கிறான்.

தனிமையான இடத்தில் வைத்து மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நிலையில், இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். இதனை வைத்து மொத்தமாக ரூபாய் ஐம்பதாயிரம் வரை பணம் பறித்துள்ளான்.

மேலும், கூடுதல் பணத்தை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததால் விரக்தி அடைந்த மாணவி செய்வதறியாது திகைக்க, பணம் வராததால் ஆத்திரமடைந்த சந்தோஷ் நெருக்கமாக இருந்த வீடியோவை தனது நண்பரான மதுரை மேலமாசி வீதி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ராகுல் என்பவருக்கு அனுப்பி இன்ஸ்டாகிராம் மூலமாக பதிவு செய்ய வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காட்டி மாணவியிடம் பணம் கேட்ட நிலையில், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் பதறியபடி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் இன்ஸ்டாகிராம் கணக்கு வாயிலாக சந்தோஷ் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்களில் பெண்கள் இதுபோன்று நாடக காதல் வலையில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.