Aval Vejpulav - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: அவல் வெஜ் புலாவ்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
Aval Vejpulav - 2026

அவல் வெஜ் புலாவ்
தேவையானவை:
நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு – அரை கப்,
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), கெட்டி அவல் – 2 கப்,
தக்காளி – 2 (அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்),
தேங்காய் பால் – அரை கப்,
கரம்மலாசா தூள் – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை, மஞ்சள்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்). கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து
வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.