health tips - 2026

அப்பாச்சி தீர்வு: நோய் எதிர்ப்புச் சக்தி, மூட்டு வலி, மூட்டுபிடிப்பு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மூட்டு வலி, மூட்டுப் பிடிப்பு சரியாக…

ஒரு கரண்டி கடுகு, ஒரு சிறுதுண்டு கஸ்தூரி மஞ்சள், அதே அளவு சாம்பிராணி ஆகியவற்றைப் பொடி செய்து தண்ணீர் கலந்து ஒரு பெரிய கரண்டியில் விட்டுச் சூடாக்கி முழங்காலில் பற்றுப் போட குணம் தெரியும். தலைவலி நீர்க்கோர்வை, சளி இருந்தாலும் இந்தப் பற்றைப் போட குணமாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தி பெருக…

நல்ல தேன் வாங்கி இரு கரண்டி இளம் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு கோழிமுட்டை சாப்பிட்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.

தொற்று நோய்களைத் தவிர்க்க..

வீட்டிற்கு ஒரு வேப்பமரம் வளர்க்கலாம். இவை. காய். பூ. பழம். பட்டை, வேர் என எல்லாப் பொருள்களும் மருந்தாகப் பயன்படும். வேப்பங்காற்றுக்கு தொற்றுநோயை விரட்டியடிக்கும் சக்தி உண்டு.

வருமுன் காக்க…

குழந்தைகளுக்கு பற்களில் ஒட்டிக் கொள்ளும் படியான தின்பண்டங்களைக் கொடுத்தல் கூடாது. இதனால் லாக்டிக் அமிலம் சுரந்து பற்களில் ஓட்டை உண்டாகும். சொத்தைப் பற்கள் உண்டாகும். பிஸ்கட், பேரீச்சம் பழம் போன்ற பற்களில் ஒட்டிக் கொள்ளக் கூடிய உணவுப் பொருள்களை உண்டால் உடனடியாக வாய்க்கொப்பளித்தல் நலம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க…

வயிற்றின் ஒரு பகுதியை உணவுக்காகவும் இரண்டாம் பகுதியை தண்ணீருக்கும் மூன்றாம் பகுதியை காற்றுக்கும் ஒதுக்குங்கள். வயிறு முட்ட உண்பது பல கோளாறுகளை உண்டாக்கும். பசித்த பின் உண்பது நலம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.