
கேரட்-குடமிளகாய் சாதம்
தேவையானவை:
குடமிளகாய் – 2,
கேரட் – 1 (மீடியம் சைஸ்),
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
அரிசி – ஒரு கப்,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
தனியா – 3 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு — 3 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து ஆறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கேரட், குடமிளகாயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் (காய்கறிகளை அதிக நேரம் வதக்க வேண்டாம்.. குழைந்து விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வதக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, ஆற வைத்த சாதத்துடன் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.





