Neem tree - 2026

வேப்பமரத்தில் வடிந்த இனிப்பான பால்.. ஆர்வத்துடன் மக்கள் பார்வை!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
Neem tree - 2026

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் சித்தர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மதியழகன்

இவரது வீட்டின் அருகே இரண்டு ஆண்டுகள் ஆன வேப்பமரத்தில் திடீரென பால்போன்ற திரவம் நுரையுடன் பொங்கி வழிந்து வருகின்றது.

இதனை சுவைத்துப்பார்த்தால், இனிப்புச்சுவையுடன் காணப்படுகின்றது.
இதனை கேள்விப்பட்ட சுற்றுப்பகுதி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பால் வருவதை பார்த்து, செல்கின்றனர்.

Neem tree milk - 2026

அப்பகுதி முதியவர்கள் கூறும் போது 50 ஆண்டுகளுக்கு மேலான மரங்களில் பால்போன்ற திரவம் எப்போதாவது வடியும். ஆனால், இரண்டு ஆண்டுகளை மட்டுமே ஆன சிறிய மரத்தில் பால்வடிவது ஆச்சரியமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இதனை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.