chennai metro rail project - 2026

பெண்களுக்கு இலவசம்: மெட்ரோவின் சிறப்பு அறிவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
chennai metro rail project - 2026

பெருமைக்குரிய பெண்களை போற்றும் விதமாக மார்ச் 8ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் மகளிர் தினத்தை முன்னிட்டு கொச்சி மெட்ரோ நிறுவனம் மெட்ரோ ரயிலில் பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

இதற்கு அனைத்து பெண் பயணிகளுக்கும் வரம்பற்ற இலவசப் பயணத்தை வழங்குவதாகவும் பெண் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் எந்த நிலையத்தில் இருந்தும் இலவசமாக ஏறிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அன்றைய தினம் முக்கிய மெட்ரோ நிலையங்களில் பெண் ஊழியர்கள் மட்டுமே கட்டுப்பட்டாளர்களாக இருப்பார்கள் என்றும் அவர்களுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் கவர்ச்சிகரமான போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.