சிவனுடன் நயன்.. புதிய காருக்கு பூஜை! வைரல்!

Published:

sivan nyan - 2026

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது புதிய காருக்கு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் பூஜை போட்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அடுத்த மாதம் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

முன்னதாக ஒடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் ஸ்டார் வேல்யூ உள்ளதால் தியேட்டரிலேயே வெளியிட தீர்மானித்துள்ளனர்.

நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் ஆறு ஆண்டுகளை கடந்து உள்ளது.

இருவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

nayandhara - 2026

இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆண்டுதோறும் தவறாமல் சபரி மலைக்கு மாலை போட்டு சென்று வருகிறார். விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் சிவன் உடன் இணைந்து அனைத்து இந்து கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இருவரும் இணைந்து போயஸ் கார்டனில் ஒரு பெரிய வீட்டையும் கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடிக்கடி இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கும் டூர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஏகப்பட்ட சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா, தற்போது புதிதாக ஒரு இனோவா காரை வாங்கி உள்ளார்.

nayandara - 2026

அதற்கான பூஜையை போட்ட நிலையில், அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

சென்னை, சென்ட்ரல் அருகே உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்த நடிகை நயன்தாரா தங்களது புதிய காருக்கு பூஜை போட்டுள்ளார்.

ஷாருக்கானின் பதான் பட அறிவிப்பு வெளியாகி விட்ட நிலையில், அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா நடித்து வரும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img