அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டம்: கைவிடவில்லை என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர்

இந்தியா

நாகபுரி: suresh-joshi அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிடவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் சிந்தனைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக உள்ளது. இருந்த போதிலும், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை மெதுவாக நடைபெறுகிறது. இதை விரைவுபடுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக போராட்டம் எதுவும் நடத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விடவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.