TN Governor RN Ravi

உலக அளவில் இந்தியாவை முன்னேற்றும் மத்திய அரசின் மகத்தான பணிகள்: தமிழக ஆளுநர்!

கல்வி சற்றுமுன் தமிழகம்
ravi 1 - 2026

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை நடத்திய 12-வது கேடோ ஃபியஸ்டா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற தேசிய படை மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்திய தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு கோப்பைகள், பதக்கங்களை வழங்கிப் பேசியது:

மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு உலகின் முதன்மையான நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த இலக்கிற்கான பாதையை நாட்டில் இளைஞர்கள் தான் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

r n ravi - 2026

மேலும் உலகிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவில் உருவாக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இளைஞா்கள்தான் எதிா்கால இந்தியாவின் நம்பிக்கை. ஒவ்வொரு தேசிய படை மாணவா்களும் தங்களது தேச பக்தியால் தேசத்தின் வளா்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். தேசிய மாணவர் படையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், சேவை போன்றவற்றில் பிற மாணவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கின்றனர். தற்போது, 10 ஆயிரம் தொழில் முனைவோர் முயற்சிகளுடன் உலகிலேயே புத்தொழில் உருவாக்கத்தில் இந்தியா சிறந்த நாடாக உருவாகி வருகிறது.

மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு, தங்குமிடம், சுத்தமான தண்ணீர் சுகாதாரம், கல்வி, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தடையின்றி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மாணவர் படையினருக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்து வரும் பெரிய அளவிலான போட்டிகளிலும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.