
செங்கோட்டை- தாம்பரம்- செங்கோட்டை இடையே இயங்கும் 20681/20682 சிலம்பு அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக 7 பெட்டிகள் இணைத்து 24 பெட்டிகள் கொண்ட ரயிலாக கடந்த 2023 முதல் இயங்கி வருகிறது. அதனை மேலும் 6 மாதங்களுக்கு(2026 ஏப்ரல் வரை) 24 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் முதல் காரைக்குடி வரை முதலில் இயக்கப்பட்டு பின்னர் இந்த ரயில் மானாமதுரை வரை நீடித்து இப்போது சென்னை தாம்பரம் செங்கோட்டை இடையே இயங்கும் சிலம்பு அதிவேக ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயிலில் 16 பெட்டிகள் மட்டும் முதலில் இயக்கப்பட்டு வந்தது
தற்போது பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பதால் 24 பெட்டிகளாக தற்காலிகமாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகளில் அனைத்திலும் பெரும்பாலும் பயணிகள் கூட்டம் 100 சதவீதம் உள்ளது.
இதனால் பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக இந்த ரயிலில் ஏழு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் இந்த ஏழு பெட்டிகளும் தொடர்ந்து ஏப்ரல் 2026 வரை நீடித்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.
இந்த ரயிலில் பயணிகள் அதிகம் விரும்பி பயணிப்பதால் வாரத்தில் மூன்று நாள் இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என தென்காசி விருதுநகர் சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்





