beetrootbhaji - 2026

கேட்டுக்கிட்டே இருப்பாங்க.. பீட்ரூட் பஜ்ஜி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
beetrootbhaji - 2026

பீட்ரூட் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – முக்கால் கப்
பச்சரிசி – கால் கப்
பீட்ரூட் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பை சுமார் மூன்று மணி நேரம் ஊறவைத்து பீட்ரூட், எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்கவும். (தோசை மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்). பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும் (ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது). பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சிறப்பு: சூடாகச் சாப்பிட்டால் சூப்பரான சுவையில் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.