December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை: பிரதமர் மோடி!

IMG 20191222 WA0039 - 2025

குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது – பிரதமர் மோடி…..

ராம்லீலா மைதானத்தில் திரண்ட ஒன்றரை லட்சம் மக்களிடம் எழுச்சியுரை….

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் அனுமதி பெறாத 1,797 குடியிருப்பு பகுதிகளை முறைப்படுத்தி பட்டா வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டா பதிவேடுகளை அளித்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை சட்டத்தினால் அனைத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுவார்கள் என்ற வதந்திகள் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் நண்பர்களான சில நகர்ப்புற நக்சல்களால் பரப்பப்படுகின்றன.

நீங்கள் கற்ற கல்விக்கு மதிப்பளித்து குடியுரிமை சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை படித்துப் பாருங்கள்.

டெல்லியில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பு பகுதிகளை இப்போது முறைப்படுத்தியபோது உங்கள் மதம் என்ன என்று கேட்டோமா? நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று கேட்டோமா?

1970, 1980-களில் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என்று கேட்டோமா?

இதனால் இங்கு வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே பலனடைந்துள்ளனர்.

என்னை தேர்தலில் சந்திக்க துணிவில்லாதவர்கள் மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு நாங்கள் குடியுரிமை சட்டத்தை திருத்தியதாக பொய்யான வதந்திகளையும் போலி வீடியோக்களயும் பரவவிட்டு நாட்டை பிளவுப்படுத்த பார்க்கின்றனர்.

பெரிய பதவிகளில் இருப்பவர்கள்கூட போலி வீடியோக்கள் மூலம் வன்முறையை தூண்டி விடுகின்றனர். நாட்டின் விடுதலைக்காக 33 ஆயிரம் போலீசார் வீரமரணம் அடைந்தது போக தற்போது கலவரக்காரர்களிடம் போலீசார் அடிவாங்கி, காயப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்னர் ஓட்டுவங்கி அரசியலுக்காக அவர்கள் கைவிட்டதை இப்போது எங்கள் அரசு செய்து வருகிறது.

அகதிகளாக இந்தியாவுக்கு வந்த மக்களுக்கும் ஊடுருவல் மூலம் வந்தேறியவர்களுக்கும் இடையே ஒரு மிகவும் சாதாரணமான வேறுபாடு உண்டு. வந்தேறிகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். அகதிகள் தங்களது அடையாளத்தை மறைக்க மாட்டார்கள்.

உலகளாவிய வகையில் முஸ்லிம் நாடுகளில் எனக்கு கிடைக்கும் ஆதரவைக்கண்டு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

உலகில் வாழும் முஸ்லிம்கள் இவருக்கு இவ்வளவு ஆதரவு அளிக்கும்போது இந்திய முஸ்லிம்களை நாம் இன்னும் எத்தனை காலம் பயமுறுத்தி அரசியல் செய்ய முடியும்? என்ற கவலையில் அவர்கள் உள்ளனர். அதனால் குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்ற பொய்யை பரப்பி வருகின்றனர்.

குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது. எனவே, வன்முறையான போராட்டப் பாதையை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories