images 34 - 2026

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் ..

சற்றுமுன்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இனி தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட மாட்டாது

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி விலையை குறைக்க அதனை தயாரிக்கும் சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசிவிலையை ரூ.600ல் இருந்து ரூ.225 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டதாக அடார் பூனாவாலா கூறியுள்ளார்.

அதேபோல், கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைக்கப்படுவதாக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குனர் சுசித்ரா கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் விலை ரூ.1,200ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவில் இனி தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.சில மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதனால், மெகா தடுப்பூசி முகாம்களுக்கு அவசியம் இல்லை. தேவைக்கு ஏற்ப மாவட்டங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி கொள்ளலாம். என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.