சிறார் விளையாட்டு விசிலில் ஆபாச படச்சுருள்! அதிர்ந்த பெற்றோர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை
visil - 2026

பிள்ளைகள் விளையாடும் புகைப்படச் சுருள் விசிலில் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் சிறுவர்கள் விளையாட கூடிய விசில் போன்ற விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், நீளமாக வண்ண காகிதங்கள் சுற்றப்பட்டு, புகைப்பட சுருள் கொண்டு வடிவமைக்கப்பட்ட விசில்களை சிறுவர்கள் அதிகம் வாங்கி விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் பகுதி சிறுவன் ஐந்து ரூபாய் கொடுத்து விசிலை வாங்கியதாகவும், சிறுவன் விளையாடிய பிறகு விசிலில் சத்தம் வராத காரணத்தினால், அதை பிரித்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது புகைப்பட சுருளிலில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக இருந்ததை பார்த்து அச்சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் அவர்கள் அதே கடைக்கு சென்று மற்றொரு விசில் வாங்கி பிரித்து பார்த்தால், அதிலும் ஆபாச படங்கள் உள்ள சுருள்தான் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் சூலூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையில் உள்ள புகைப்பட சுருள் விசில்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, கடை உரிமையாளர் பாலகுமாரிடம் விசில் வாங்கிய இடம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களை குறிபார்த்து ஆபாச படச்சுருளால் ஆன விசிலை விற்பனை செய்து வந்தது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.