தான் நடிக்கும் மாஸ்டர் படத்துக்காக ஒரு குட்டிக் கதை என்ற பாடலை, நடிகர் விஜய் பாடி அதை, காதலர் தினத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
டிசைன் டிசைனாக பிரச்னைகள் வந்து போனாலும் கூலாகவே இருங்கள் விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து, இந்தப் பாடல் மூலம் ஒரு குட்டிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, இந்தப் பாடல் தனுஷ் நடித்த 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடலின் சாயலில் இருப்பதாகப் பலரும் சொல்லத் துவங்கி இருக்கும் நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்காக அமைக்கப்பட்ட சும்மா கிழி பாடலைப் போன்றே, இதுவும் அப்பட்டமான காப்பி என்கின்றனர்
இணையதளவாசிகள் பலரும்.சும்மா கிழி பாடல் வெளியானபோதும், இதே போலவே ஐய்யப்பன் பாடலும், பிரஷாந்த் நடித்த தண்ணிக் குடம் எடுத்த பாடலின் பாடலின் ட்யூன்களும் அப்படியே பயன் படுத்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக் கிளம்பி, பலரும் கிண்டல் செய்துவந்தனர்.
இந்த நிலையில் விஜய் பாடியிருக்கும் இந்த ஒரு குட்டி கதை பாடல், பக்தி படமான ராஜகாளி அம்மன் படத்தில் இடம் பெற்ற, ‘சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்… பாடலின் அதே ட்யூனில் இருப்பதாக கூறி, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்