images 41 1 - 2026

திருமலையில் கூட்டம்- பக்தர்கள் திருமலை பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் கோரிக்கை…

சற்றுமுன்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் இரு மடங்காக அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வி.ஐ.பி பிரேக்’ தரிசனத்தை ரத்து செய்துள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.

திருப்பதியில் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் தருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் இரு மடங்காக அதிகரித்துள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை சிறிது தள்ளி வைக்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தரிசன டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதால், தரிசன வரிசையில் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றனர். இதனால் ஏற்படும் நெரிசலில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

images 41 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.