health tips - 2026

அப்பாச்சி தீர்வு: வெட்டை நோய், பாரிசவாயு, பாம்புக்கடி, நாய்க்கடி, உடல் ஆயாசம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

வெட்டை நோய் குணமாக…

அம்மான் பச்சரிசி இலைகளை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் நீராகாரத்தில்
கலக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வெட்டை நோய் குணமாகும்.

பாரிச வாயு குணமாக…

சூரத்தாவாரை, முடக்கத்தான், வேலிப்பருத்தி இம்மூன்றையும் கைப்பிடியளவு எடுத்து தண்ணீர் விட்டுப் பாதியாக சுண்டக் காய்ச்சி தினமும் காலையில் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர பாரிச வாயு குணமாகும். குணமாகாவிட்டால் மீண்டும் மூன்று நாள்களுக்குச் சாப்பிட வேண்டும்.

பாம்புக் கடிக்கு…

கரிசலாங்கண்ணி இலையை இடித்துச் சாறு பிழிந்து ஓர் அவுன்ஸ் சாற்றை மோரில் கலந்து குடிக்க பாம்புக் கடி விஷம் இறங்கும்.

நாய்க் கடிக்கு…

கண்டங்கத்திரி இலைச் சாறுடன் சம அளவு தேன் கலந்து ஒரு வேளைக்கு அரை அவுள்ஸ் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட குணமாகும். ஆனால், உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

உடல் ஆயாசமாயிருக்கிறதா?

பூசணிக்காயின் சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் களைப்பு, சோர்வு எல்லாம் நீங்கி விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.