images 6 - 2026

சபரிமலை வைகாசி மாத பூஜை-ஆன்லைன்  முன்பதிவு துவக்கம்..

ஆலயங்கள்

வைகாசி மாத பூஜைகளுக்காக,உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மே 14  திறக்கப்படுவதையொட்டி சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன்  முன்பதிவு துவங்கியுள்ளது.

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை வரும் மே 14 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும்.

மே15 அதிகாலை முதல் மே 19 இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில்  துவங்கியுள்ளது.

முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ‘நெகட்டீவ்’ சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.நிலக்கல்லிலும் ஸ்பாட் முன்பதிவு வசதி உள்ளது.

images 6 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.