ajith 3 - 2026

AK 61: சூப்பர்.. இவர் தான் ஜோடியாம்..!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith 3 - 2026

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜீத்குமார். கிங் ஆப் ஓப்பனிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜீத் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்திற்காக அஜீத்(Ajith) உடல் எடையை அதிகளவில் குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். மேலும், இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சுவாரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், மலையாளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் மஞ்சுவாரியர் பங்கேற்றார்.

அவர் ஏகே 61 படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறி ஏகே 61-ல் இணைந்திருப்பதை உறுதி செய்தார்.

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜீத்குமாருக்கு ஜோடியாக சேர்ந்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலிமை படத்தில் ஹியூமா குரேஷிக்கு வலுவான கதாபாத்திரம் அளிக்கப்பட்டது போல, ஏகே 61 படத்திலும் மஞ்சுவாரியருக்கு வலுவான கதாபாத்திரம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுவாரியர் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது,

படத்தின் இன்ன பிற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படங்களை இயக்கும் எச்.வினோத் இந்த படத்திலும் உண்மை சம்பவம் ஒன்றை தழுவி திரைக்கதையை உருவாக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

வலிமை படத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படத்தின் வெற்றி படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால், ஏகே 61 படத்தை விரைவாகவே இயக்கி முடிக்கும் முடிவில் படக்குழு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

mantchu warriar - 2026

இந்த படத்தில் நடிப்பதற்காக அஜீத் தனது உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 61 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.