gas
gas

வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும்.

அந்த வகையில் சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 25 அதிகரித்தது.

தமிழகத்தில் ரூ.810 க்கு விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர்25 ரூபாய் உயர்ந்து ரூ. 835 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.10 குறைந்து ரூ.825 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.825 இல் இருந்து ரூ.850 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஏப்ரல், மே, ஜூனில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.825 ஆக இருந்த நிலையில் மூன்று மாதத்துக்குப் பிறகு விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending