train - 2026

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்ணை சாமர்த்தியமாக காப்பாற்றிய சம்பவம் காவலர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
train - 2026

ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை கான்ஸ்டபில் ஓடும் ரயிலின் கீழ் விழ இருந்த பெண்ணை சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியது

மேலும் இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து போது பெண் பயணி ஒருவர் கீழே இறங்க முயற்சித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பெண், ரெயில் மற்றும் நடைமேடைக்கு மத்தியில் சிக்கிக் கொண்டார்.

இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை கான்ஸ்டபில் சன்ராம் முண்டா கன நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு சிக்கிய பெண் பயணியை பத்திரமாக இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார்.

போலீஸ் கான்ஸ்டபில் இழுத்ததில் ரயிலில் சிக்கிய பெண் பயணி, அவருடன் கீழே இறங்க ஆயத்தமான மற்றொரு பயணி மற்றும் கான்ஸ்டபில் என மூவரும் கீழே விழுந்தனர். எனினும், ரயில்வே நிலையத்தில் ஏற்பட இருந்த பெரும் சம்பவம் போலீஸ் கான்ஸ்டபில் மேற்கொண்ட சாமர்த்திய நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டு விட்டது.

வைரல் வீடியோவை பார்த்த ஐ.பி.எஸ். அதிகாரி சுதான்ஷு சாரங்கி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் கான்ஸ்டபில் சன்ராம் முண்டாவின் சாமர்த்திய செயல் மூலம் பெண் காப்பாற்றப்பட்ட தகவலுடன், கான்ஸ்டபிலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார். இத்துடன் வீடியோவையும் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.