elephant 1 - 2026

காண்டான காண்டாமிருகம்.. யானையையே எதிர்க்கும் காட்சி!

அடடே... அப்படியா? பொது தகவல்கள்
elephant 1 - 2026

யானை மற்றும் காண்டாமிருகம் போட்டுக் கொள்ளும் மூர்க்கத்தனமான சண்டை வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகியுள்ளது.

காட்டில் இருவருக்கும் இடையே எப்படி சண்டை சூழல் உருவாகிறது என்பதை வீடியோவில் பார்க்கலாம்.

இரண்டு மிருகங்களும் சிலிர்த்துக் கொண்டு எதிரெதிரே நிமிர்ந்து நிற்கின்றன. காட்டில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.

யானை மற்றும் காண்டாமிருகம் சண்டை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் யானையும் காண்டாமிருகமும் நேருக்கு நேர் நிற்பதை காண முடிகிறது. பின்னர் விரைவில் அவர்கள் ஒருவரையொருவர் உற்றுப் பார்க்கத் தொடங்குகின்றன.

காண்டாமிருகம் புழுதி பறக்க, யானையைத் தாக்க முயல்கிறது (Elephant Video). நின்றுக் கொண்டிருக்கும் யானை, மிகுந்த அவசரத்துடன் நின்று காண்டாமிருகத்தின் தாக்குதலைத் தவிர்க்க முயல்கிறது.

இந்த ஆட்டம் இருவருக்குள்ளும் சற்று நேரம் நீடிக்கிறது. இந்த காணொளியை பார்த்து சமூக வலைதளவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

யானையுடன் ஒப்பிடும்போது, காண்டாமிருகம் உருவத்தில் சிறியதாக இருக்கிறது. யானை மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு என்றாலும், இந்த வீடியோவில், காண்டாமிருகத்தை கண்டு கொஞ்சம் பயந்து போவதாக தெரிகிறது.

காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ theglobalanimalsworld என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு இதுவரை நூற்றுக்கணக்கான லைக்குகள் மற்றும் பார்வைகள் கிடைத்துள்ளன.

ஆனால், இது இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான விளையாட்டு வீடியோவாகவும் இருக்கலாம் என்றும் சில சமூக ஊடக பயனர்கள் கருதுகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.