dog 4 - 2026

அட எப்படி ஆடுது இந்த குட்டி நாய்.. வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
dog 4 - 2026

நாய்க்குட்டி ஒன்று வீட்டில் இருந்தால் அந்தக் குட்டியை தங்களது குழந்தையாகவே நினைத்து வளர்க்கும் பலர் இருக்கிறார்கள். அந்த நாய்க்குட்டிக்கு தனி அறை ஒதுக்குவது, தன்னுடனே படுக்க வைத்துக்கொள்வது, எங்கு சென்றாலும் உடன் அழைத்து செல்வது என தங்களுடனே வைத்துக்கொள்வர்.

அதுமட்டுமின்றி அந்த நாய்க்குட்டிக்கு பல விஷயங்களை கற்றுத்தரவும் செய்வார்கள். அப்படி ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் நாய்க்குட்டி ஒன்றின் முன் அதன் உரிமையாளர் நடனம் ஆடுகிறார். அதனை பார்த்த அந்த நாய்க்குட்டியும் அச்சு பிசகாமல் அப்படியே நடனம் ஆடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.