நாய் காதல் செய்தால் நடவடிக்கை! பூங்காவில் எச்சரிக்கை பலகை!

Published:

madhurai park - 2026

காதல் ஜோடிகளின் எல்லை மீறலை தடுக்கும் வகையில் நாய் காதல் செய்தால் நடவடிக்கை என மதுரையில் உள்ள பூங்காவில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

காந்தி மியூசியம் சாலையிலுள்ள மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்காவில் ‘காதலர்கள்’ போர்வையில் எல்லை மீறும் ‘சில்மிஷ’ ஜோடிகளை திருத்த ‘நாய் காதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கடுமையாக எச்சரித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை தமுக்கம் மைதானம் அருகே அமைந்துள்ளது ராஜாஜி சிறுவர் பூங்கா. மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என குடும்பத்தோடு இங்கு பொழுது போக்குவது வழக்கம். மதுரையின் வேறு சில பொழுதுபோக்கு பூங்காக்களில் இதுவும் ஒன்று.

இந்த பூங்காவில் அண்மைக்காலமாக ஜோடி ஜோடியாக வந்து அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுடன் இங்கு வரும் பெற்றோர்கள் முகம் சுளிக்கின்றனர். இதனால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் நாய் காதல் செய்யாதீர்கள் என எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img