கோடையிலும் குளிக்கலாம்

உள்ளூர் செய்திகள்

      main மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஆண்டுக்கு சுமார் ஐம்பது இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத்தளம் குற்றாலம்.அருவிகளின் நகரமான இங்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும்.சீசன் முடிந்து ஆறு மாதங்கள் கழிந்தப்பின்பும் தற்ப்போதும் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது.தற்போது தினமும் காலையில் ஒன்பது மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக குடிநீர் வினியோகத்திற்கு செல்லும் நீர் அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றி விடப்பட்டு பின்னர் குடிநீருக்கு திருப்பி விடப்படுகிறது.இதனால் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று நம்பி வரும் சுற்றுலாப் பயணிகள் காலையில் குளிக்கும் வண்ணம் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.