statue - 2026

வீடு கட்ட தோண்டும் போது கிடைத்த சுவாமி சிலைகள்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
statue - 2026

வலங்கைமான் அருகே ஆலங்குடியில், முத்து என்பவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டினார். அப்போது அங்கிருந்து சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சிலைகளை திருவாரூர் அருங்காட்சியக காப்பாச்சியர் மருதுபாண்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதில் சிலைகள் அனைத்தும் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், ஐம்பொன்னால் செய்யப்பட்டவை எனவும் தெரியவந்தது.

3 அடி உயரத்தில் உள்ள சிலையானது சுந்தரர் சிலை என்பதும், சிறிய அளவில் உள்ளவை தன்வந்திரி, இராமானுஜர், பூமா தேவி, ஸ்ரீ தேவி சிலைகள் எனவும் கண்டறியப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.