cat rat - 2026

நீயே ஒரு உணவு.. நீ எங்க கூட சாப்பிடர..🙄! அதிர்ச்சியான பூனைஸ்!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
cat rat - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ எலிகள் மற்றும் பூனைகள் பற்றியது. பொதுவாக பூனைகளை கண்டு எலி அஞ்சி ஓடும் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அப்படி அல்ல என நிரூபிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோவில் ஒரு தட்டில் உணவு இருப்பதை காண முடிகின்றது. அந்த உணவை இரு பூனைகள் சாப்பிடுவதைக் காண முடிகின்றது. அப்போது அங்கு ஒரு எலி வருகிறது. அதற்கு பின் வீடியோவில் நடக்கும் விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது.

பூனைகள் முன்னால் வந்த பிறகு எலி பூனைகளை கண்டு சிறிதும் அஞ்சவில்லை. மாறாக, இரண்டு பூனைகளுக்கும் தான் தான் தலைவன் என்பதுபோல் தலை நிமிர்ந்து நிற்கிறது. பூனைக்கு நடுவில் புகுந்து தட்டில் உள்ள உணவை உண்ணத் தொடங்குகிறார்.

இதைப் பார்தத பூனைகள் அதிர்ச்சி அடைந்தன. பூனைகள் எலியை பாடாய் படுத்தவுள்ளன என நினைத்திருக்கும் இணயவாசிகளுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

எலியை கண்டுகொள்ளாத பூனைகள் உணவை சாப்பிடுவதை தொடர்கின்றன. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுகின்றது.

இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமிலும் 18plusguyy என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பல வித வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.

பரம எதிரியாக இருந்தாலும், பயப்படத் தேவையில்லை. நம்மை விட பலசாலியாக இருந்தாலும், நாம் அச்சம் இல்லாமல் தைரியமாக இருந்தால், முன்னால் இருப்பவர் நம்மை சீண்டத் தயங்குவார் என்பதை இந்த எலி நமக்கு புரிய வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.