Techno Boa3 - 2026

டெக்னோ நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த சாதனம் தற்போது பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன்.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஜி88 சிப்செட் வசதியுடன் Mali-G52 2EEMC2 ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த HiOS இயங்குதளத்தை கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.

பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி,
டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

அதபோல் ஈகோ பிளாக், எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் டெக் சில்வர் நிறங்களில் இந்த டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனின் விலை PHP 8,999 (இந்திய மதிப்பில் ரூ.13,400) ஆக உள்ளது. பின்பு
இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை PHP 9,399 (இந்திய மதிப்பில் ரூ.13,900) ஆக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending