sea death 1 - 2026

இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..

சற்றுமுன்

அரக்கோணம் திருநெல்வேலி அருகே பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் பஜார் மதுரை பிள்ளை தெருவை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (14). அரக்கோணம் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் சனிக்கிழமை தனது நண்பர்களுடன் கீழ்க்குப்பம் பகுதியில் உள்ள குட்டையில் குளித்து க் கொண்டு இருந்த போது நீரில் மூழ்கினார். நண்பர்கள் தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து அறிந்த அரக்கோணம் தீயணைப்பு துறையினர் தட்சிணாமூர்த்தியின் சடலத்தை வெளிக்கொணர்ந்தனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபோல் இன்று மதியம் திருநெல்வேலி அருகே முக்கூடல் ஆற்றில்
ராஜபாளையம் பெரிய தெருவை சேர்ந்த ரமண பிரகாஷ் மகன் கைலாஷ் வயது 13 குளித்த போது நீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sea death 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.